குடும்பம் ஒன்று சொகுசான வாழ்க்கைக்காக குடிபெயர்ந்த போது அக்குடும்ப தலைவர் கொரோனவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் வசித்து வந்த Majd Yared தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கனடாவுக்கு 2016ம் வருடம் குடிபெயர்ந்துள்ளார். இவர் அங்கு குடியுரிமை பெற்று ஹோட்டல் வைத்து நடத்தி சொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைந்த கனவோடு இருந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கனவு நிறைவேறாமல் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்த தொற்று பாதிப்பு முதலில் அவர் மனைவிக்கு தான் இருந்திருக்கிறது அதன் பிறகு தான் அவருக்கு பரவியிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து அவருடைய குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில், “Majd கனடாவை மிகவும் நேசித்தார். மேலும் அங்கு அவர் தனது குடும்பத்தாரை சந்தோசமாகவும், அவர்களுக்கு சொகுசானா வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் மிகுந்த ஆசையோடும், கனவோடும் இருந்தார். அவரது இறப்பு எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் Majd யின் கனவை நிறைவேற்றும் வகையில் அவரது குடும்பத்தாரின் நலனுக்காக நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.