வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தஞ்சை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இந்த மரணம் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது துரைக்கண்ணு மறைந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் தொகுதி காலி என பேரவைத்தலைவர், பேரவை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இதற்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. துரைக்கண்ணு கடந்த 31ம் தேதி சென்னையில் காலமானது குறிப்பிடத்தக்கது.