பிரெஞ்சு அரசியல்வாதி ஒருவர் மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ்க்கு இடம்பெயர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி, முகமது நபியின் கார்ட்டூன்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து நைசிலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் Avigon ல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்ட்டூன்களை காட்டியதால் அவரை தீவிரவாதி ஒருவர் கொன்று விட்டார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இன்னும் இந்த கார்ட்டூன் கலாச்சாரங்கள் தொடரும் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறியிருந்தார்.
மேக்ரான் இவ்வாறு பேசியதற்காக பாகிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளும் இவரை கடுமையாக விமர்சித்து வந்தன. இதனிடையே மக்கள் பாகிஸ்தானிலிருந்து பிரான்சிற்கு இடம்பெயர்வதை தடுக்க தடை விதிக்க வேண்டுமென்று பிரெஞ்சு அரசியல்வாதி Marine Le Pen அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் Marine தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரான்சை விமர்சிக்கும் விதமாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் பிரான்சை விமர்சிக்கும் நாடுகளிலிருந்து மக்கள் இடம்பெயர்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
My letter to leaders of Muslim states to act collectively to counter the growing Islamophobia in non-Muslim states esp Western states causing increasing concern amongst Muslims the world over. pic.twitter.com/OFuaKGu2c1
— Imran Khan (@ImranKhanPTI) October 28, 2020