மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைத்தால் பல கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என புதுவை பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜாக மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர், அட்சயா அறக்கட்டளையின் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக அணியில் சேர்ந்தனர். அப்போது பேசிய சாமிநாதன், பாஜக புதுவையில் 2021ம் வருடம் ஆட்சி அமைத்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு, ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்படும். மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்தால் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் எல்லாமே தள்ளுபடி செய்யப்படும்.
தற்போது சில காரணங்களால் மூடப்பட்டுள்ள ஆலைகள் அனைத்தும் திறக்கப்படும் என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், தொகுதி தலைவர் துரைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், தொகுதி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் உள்பட கலந்துகொண்டுள்ளனர்.