கொரோனா பதிப்பு உடையவருடன் தொடர்பில் இருந்ததால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டேட்ரோஸ் ஆதோனம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தனக்கும் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற பயத்தில் டேட்ரோஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் என்னுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை நலமாக தான் உள்ளேன். ஆனாலும் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். வீட்டில் இருந்தபடி எனது பணிகள் தொடரும். அனைவரும் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டியது அவசியம்.
இதனால் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய முடியும். வைரஸை முற்றிலுமாக அழிக்க முடியும். சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளை நானும் என்னுடன் இருப்பவர்களும் தொடர்ந்து செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.