கொரோனா வைரசால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணி நடந்து வருகின்றன. சீனாவில் இவ்வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் Connar Reed ஆவார். சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தன் தாய்நாடான பிரிட்டன் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த வாரம் நடந்த பயங்கரமான விபத்தில் என் மகன் உயிரிழந்து விட்டான்.
இதனால் எனக்கும், அவரது சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “எனது மகன் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடித்தார். அவரைப் போல யாரும் அதிகநாட்கள் ஊரடங்கில் இருந்திருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு Connar கூறியதாவது, “வைரசால் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் என்னிடம் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். இறந்து விடுவோமோ என்று நினைத்து பயந்தேன். ஆனாலும் அதிலிருந்து என்னால் மீள முடிந்தது. மருத்துவமனையில் இன்ஹேலரை பயன்படுத்தியதால் இருமல் நின்றது. மேலும் தேனுடன் ஒரு சூடான விஸ்கியை கலந்து குடித்து வந்தேன் இது ஒரு பழங்கால வழிமுறை” என்று கூறியது நினைவுகூரத்தக்கது.