Categories
உலக செய்திகள்

56 வயது பெண்…. முதல்ல 10 திருமணம்…. இப்ப 11க்கு ரெடி…. காரணம் இதுதான்…!!!

10 திருமணங்கள் செய்த பெண்ணுக்கு சரியான வாழ்க்கைத்துணை  கிடைக்காததால் 11 வது திருமணம் செய்ய இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வசிப்பவர் கேசி. இவருக்கு 56 வயது ஆகியுள்ள நிலையில் தற்போது 11 வது திருமணம் செய்ய தயாராக இருக்கிறார். இதுகுறித்து கேசி கூறுகையில், “என்னுடைய ஆசை என்னவென்றால் என்னை மட்டுமே நேசிக்கும் ஒரு கணவன் வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு கணவர் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு என சில கட்டுப்பாடுகள் இருக்கிறது” என்று கூறினார். அவர் செய்த 10 திருமணங்களில் முதல் கணவருடன் 8 வருடமும், இரண்டாவது கணவருடன் 6 வருடமும், மூன்றாவது கணவருடன் 2  வருடம் என வாழ்ந்து இருக்கிறார். இதில் மூன்றாவது கணவரின் மூலமாக இவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.

இதையடுத்து தன்னுடைய பத்தாவது கணவரை சில நாட்களுக்கு முன்புதான் விவாகரத்து செய்து இருக்கிறார். இந்நிலையில் திருமண வாழ்க்கையை பாதுகாப்பது எப்படி? என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேசி கூறுகையில், “எனக்கு பிடிக்காத நிலையில் நான் நேரடியாகவே என் கணவரிடம் சென்று பேசிவிடுவேன். அதன்பின்பு விவாகரத்து வாங்கிக் கொண்டு அந்த திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறி விடுவேன். இதனால் இதில் தேவையில்லாத மனஸ்தாபங்கள், சண்டைகள் போன்ற எதுவுமே நடக்காது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |