Categories
தேசிய செய்திகள்

“பாலியல் அரக்கண்” நாங்க உங்க பிள்ளைங்க…. தந்தையால் நேர்ந்த கொடுமை…. பிள்ளைகள் எடுத்த முடிவு… தாயின் உருக்கம்…!!!

தன் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணவனை மகள்களோடு சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நொய்டாவில் ஐம்பது வயது நபர் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் கழுத்தை நெரித்து மனைவி மற்றும் மகள்கள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி தெரிவிக்கையில், “என் கணவருக்கு குடி மற்றும் போதைப் பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் உடலுறவின் மேல் அதிக நாட்டம் உள்ளவராக இருந்ததால் என்னை மிகவும் கொடுமைப்படுத்தியதோடு,தீ வைத்து எரிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து 16,14 ,11 வயதுகளில் உள்ள என் மகள்களுக்கும் கடந்த சில ஆண்டுகளில் இருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதில் தனது 16 வயது மகளை அவர் பலாத்காரம் செய்ததின் காரணமாக அவள் அதிக உதிரப் போக்கால் இறந்துவிட்டார். இது குறித்து வெளியே சொன்னால் பிறர் தந்தையே தன் மகளை பலாத்காரம் செய்ததால் அசிங்கமாக நினைப்பார்கள் என்று நினைத்தும், கணவருக்கு பயந்தும் சொல்லவில்லை. இதையடுத்து என் மற்ற இரு பிள்ளைகளுக்கும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் நாங்கள் மூவரும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினோம்.

எனவே இவரை கொலை செய்தால் பாலியல் தொல்லைகளிலிருந்து  இருந்து தப்பிக்கலாம் என்று முடிவுசெய்தோம். இதையடுத்து சம்பவத்தன்று நான் அவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். எனது இளைய மகள் அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டார். கடைசியில் எனது மூத்த மகள் அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்று விட்டார். என் கணவரின் பாலியல் தொல்லைகள் குறித்து ஏற்கனவே நாங்கள் மேர்னா காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்கள் எனக்கும் என் மகள்களுக்கும் உதவவில்லை என்று கூறினார். இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி பிரதீபா தீட்சித் கூறும்போது, நாங்கள் விசாரணைக்காக இவரது கணவரிடம் செல்லும் போது, அவர் குடிபோதையில் இருந்ததால் நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் எனவே விட்டு விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |