கடன் பிரச்சினையின் காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகா்கோவில் அருகே டி. வி.டி நகர் காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் பலரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைதிருப்பி கேட்டுள்ளனர் ஆனால் அவரால் பணத்தை கொடுக்க முடியவில்லை இதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
இந்த நிலையில் நேற்று நாகராஜன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.