Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ரெசிபியை… வாழை பழத்துடன் சேர்த்து சாப்பிட… பிரமாதமா இருக்கும்…!!

அவல் உப்புமா செய்ய தேவையானவை:

அவல்                                         – 500 கிராம்
கடுகு                                          – 30 கிராம்
கடலைப்பருப்பு                      – 50 கிராம்
முந்திரிப் பருப்பு                    – 50 கிராம்
எண்ணெய்                                -150 மி.லி
தண்ணீர்                                     – 650 மி.லி
வெங்காயம்                             – 250 கிராம்
காலிஃப்ளவர்                          – 150 கிராம்
பச்சை பட்டாணி                     – 50 கிராம்
கேரட்                                            – 200 கிராம்
பீன்ஸ்                                             -100 கிராம்
பச்சை மிளகாய்                         – 3
கொத்தமல்லித் தழை            – 25 கிராம்
கறிவேப்பிலை                           – 15 கிராம்
இஞ்சி                                            -20 கிராம்

செய்முறை:

வெங்காயம், காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை அனைத்து காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் அவல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்பு காய்கறிகள் நன்கு வெந்ததும் சில நிமிடங்களுக்கு பிறகு கொத்த மல்லித்தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறினால் சுவையான அவல் உப்புமா ரெடி.

 

Categories

Tech |