இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய அளவில் 482 பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளது.
முக்கிய தேதிகள்
இதற்கான விண்ணப்பம் நவம்பர் 4ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்காலம்
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு வருடமாகவும், டேட்டா என்ட்ரி பயிற்சியாளராக இருக்க விண்ணப்பிப்பவர்கள் 15 மாதங்களாகவும் பணி காலம் இருக்கும்.
வயது வரம்பு
அக்டோபர் 30, 2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயது மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் டிப்ளமோ படிப்பு 3 வருடம் முடித்திருக்க வேண்டும்.
டேட்டா பதிவிடும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ட்ரேடு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை
இப்பணிகளில் எழுத்துத்தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 100 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 40 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாகவும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.