Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த நாடு மதம் பிடித்து அலையுது….. பா.ஜ.க., காங்கிரஸை…. தெறிக்கவிட்ட சீமான் …!!

இந்தியா மதம் பிடித்து அலையுது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தோன்றிய நாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழகத்தில் பாரதிய ஜனதாவை அதிமுக கைவிட வேண்டும். காங்கிரஸ் திமுக கைவிட வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் எதிரிகள். எதற்கு பிஜேபி ?தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் எதுக்குக்கு.

என் இனத்தை கொன்றவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். கதரகதர கொன்று அளித்து முடித்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். யானைக்கும், மனிதனுக்கும் மதம் பிடித்தால் அழிவை தவிர வேறு ஒன்றும் மிஞ்சாது. இந்த நாடு முழுக்க முழுக்க மதம் பிடித்து அலையுது. நான் கட்சி ஆரம்பிக்கும் முன்பு இருந்து பிஜேபி இருக்கு… அப்படி இருக்கையில் இத்தனை ஆண்டுகள் ”வேல்”லை தொடாமல் இப்போது தொட வேண்டிய தேவை என்ன இருக்கு ?

எனக்கு பயந்துகிட்டு அவர்கள் வேல் யாத்திரை நடத்துகின்றார்கள். மக்களின் பிரச்சினைக்கு எப்போதுமே பாஜக நிற்காது. மக்களுக்கு பிரச்சனையே பாரதிய ஜனதாவால் தான். இந்த ”வேல்”லை எடுத்துக்கிட்டு இவர்கள் செய்யும் அரசியல் வெல்லாது, இந்த காலத்திலும் எந்த ”வேல்”லை அவர்கள் எடுக்கிறார்களோ…  அந்த ”வேல்”லை வைத்தே நாங்கள் அவர்களை அரசியல் களத்தில் அவர்களை வீழ்த்துவோம்.

நீங்கள் எவ்வளவுதான் எடுத்துகிட்டு அரோகரா, வீரவேல், வெற்றிவேல் என்று கத்தினாலும் முருகா என்றால் சீமான் முகம் தான் வரும் மக்களுக்கு. இந்த நவம்பர் 1 நாங்களும் வேல் பயணம் தொடங்கி இருக்கின்றோம். இன்னைக்கு தொடங்கியிருக்கும் வேல்யாத்திரையை டிசம்பர் 6 வரை டிசம்பர் 1 வரை நடத்தலாமே…. ஏன் டிசம்பர்-6 வரை நடத்துகின்றார்கள். மக்களிடையே சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படும் என்பதால் அவர்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது என சீமான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |