பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 தொடங்கியிள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் முதல் போட்டியாளறாக ரேகா வெளியேறிவிட்டார். இதனை தொடர்ந்து 1- வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்தார். இவரை பார்த்த சில போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டாலும், பலர் ஷாக் ஆகினர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.