ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டி எதற்கு தந்தை பெரியார் கூட விபூதியை போட்டு கொண்டார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு மீதம் இருந்த விபூதியை தரையில் கொட்டியுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “தேவர் நினைவிடம் ஆலயத்திற்கு சமம். அங்கு ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியும் வேதனையும் கொடுக்கிறது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஆனால் எந்த தலைவரும் இது போன்று அவமரியாதையாக நடந்து கொண்டதில்லை. ஆனால் திமுக தலைவர் அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியுள்ளார்.
இதேபோன்று ஸ்ரீரங்கத்திலும் குங்குமத்தை உதாசீனப்படுத்தினார் விபூதியை வாங்குவதற்கு விருப்பம் இல்லை என்றால் வழிபாடு மட்டும் செய்து விட்டு வந்திருக்கலாம்.. ஆனால் அவர் இந்துக்கள் புனிதமாக நினைக்கும் விபூதியை அவமதித்துவிட்டார் தந்தை பெரியார் கூட தனக்கு வழங்கப்பட்ட திருநீரை மரியாதைக்காக நெற்றியில் அணிந்து கொண்டார். ஆனால் ஸ்டாலின் செய்த செயல் வேதனையை கொடுக்கிறது. அவர் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன். இனி இதுபோன்ற கொடுமை நடக்காத வண்ணம் மற்ற தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.