கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதற்கான முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். உணவுக்கு முன்பாக போலியோ உள்ளிட்ட மிகப்பெரிய நோய்களையும், நம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
அதற்கான சிறந்த தீர்வாக, தடுப்பு பூசியும் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதன் மூலம், போலியோ உள்ளிட்ட கொடிய நோய்களிலிருந்து மனிதர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் மருத்துவம், குழந்தை பொருட்கள் உற்பத்தியில் பிரபலமடைந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை குழந்தைகள் மீது பரிசோதனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று மிகவும் பாதுகாப்பான வகையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பரிசோதனை நடத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.