ஆந்திர மாநிலத்தில் மின்சார வாகனங்கள் வாங்குவோரை சிறப்பு சலுகை ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய பொருளாதார அச்சுறுத்தலாகவே திகழ்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால், மக்கள் அனைவருக்கும் மின்சார வாகனத்தில், அதீத தொழில் நுட்பம் வளர்ந்து விடாதா? என்ற ஏக்கம் நிலவிவருகிறது.
இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிறைவேறி உள்ள சூழ்நிலையில், இந்தியாவிலும் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தியை அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். தமிழக முதல்வரும் சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, மிகப்பெரிய நிறுவனமான டெஸ்லா நிறுவனத்துடன் மின்சார வாகனம் குறித்து ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மின்சார வாகனத்தை மக்கள் அதிகம் வாங்குவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 2030ஆம் ஆண்டு வரை மின்சார வாகனங்களுக்கான கொள்கையை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது. அதில், மின்சார வாகனங்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதிலிருந்து 100 சதவிகிதம் விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த சலுகை என்றும் குறிப்பிட்டுள்ளது.