உத்தரபிரதேச மாநிலத்தில் அலாவுதீன் விளக்கு எனக் கூறி 31 லட்சம் மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோரிடம் உழைக்காமலே அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகப்படியாக எட்டிப்பார்க்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தைப் போட்டு பல மோசமான முடிவுகளுக்கு தள்ளப்படுவது தான். இது மட்டுமல்லாமல், பல மோசடிக் கும்பல்களும் மக்களிடம் ஆசையைத் தூண்டி நூற்றுக்கணக்கில் பணங்களை மோசடி செய்துதான் வருகிறார்கள்.
அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாதாரணமான விளக்கை அலாவுதீன் அற்புத விளக்கு என்று கூறி ரூபாய் 31 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளக்கை, வாங்கிய எல்.ஏ.கான் என்ற மருத்துவர் அந்த விளக்கு பொய் என தெரிந்ததும் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து விளக்கை விற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.