கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இ-பாஸ் இல்லாமலே தமிழகம்- புதுச்சேரி இடையே பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து தமிழகம் புதுச்சேரி இடையே பேருந்து சேவையை உடனடியாக தொடங்குகிறது.