நான் கொரோனா பயத்தில் இருக்கின்றேன் என்றும், என்னால் பழையபடி உடல்பயிற்சி செய்யமுடியவில்லை எனவும் நடிகை தமன்னா கூறியுள்ளார்.
சினிமாத்துறையில் தமன்னா முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் சிக்கி மீண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் நான் இன்னும் கொரோனா பயத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் உடற்பயிற்சியில் ஆர்வம் உடையவள் என்று எல்லாருக்கும் தெரியும். எந்த நேரமும் உடற்பயிற்சிகள், யோகா செய்து கொண்டு இருப்பேன். உடற்பற்சி மற்றும் படப்பிடிப்பு ரெண்டும் என் வாழ்வின் ஒன்றாக இருந்ததது. உடற்பயிற்சி புகைப்படங்களை கொரோனா காலத்தில் வெளியிடுவேன். நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் உடற்பயிற்சியில் கவனம் செழுத்துகள் என்று சொல்வேன்.
ஆனால் எனக்கு கொரோனா தொற்று வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன் .இப்போது முழுமையாக குணமாகி திரும்பவும் உடற்பயிற்சியை தொடங்கி விட்டேன். ஆனால் என் வேகம் குறைந்ததுள்ளது. முன்பு மாதிரி என்னால் உடல் பயிற்சி செய்ய இயலவில்லை. சிறிது நேரத்தில் சோர்வாகி விடுவதன் மூலம் மிகவும் பயந்து போய் உள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக முந்தய நிலைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன். கொரோனா வந்ததால் உடல் மிகவும் சோர்வாகி விடும். மீண்டும் உடலுக்கு சக்தி கொண்டு வருவது ரொம்ப கடிணம். இதனால் குணம் அடைந்த பிறகு உடல் பயிற்சியை விடாமல் முன்பு போல் மாறிவிட உழைக்க வேண்டும் என தமன்னா தெரிவித்துள்ளார்.