Categories
உலக செய்திகள்

அலாவுதீன் அற்புத விளக்கு…. கேட்டதெல்லாம் கொடுக்கும்…. மருத்துவரின் கோடீஸ்வர ஆசை… பறிபோன 2.62 கோடி…!!!

மருத்துவரிடம் தாங்கள் மந்திரவாதி என்று கூறி விளக்கை விற்று மோசடி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் மருத்துவராக வேலை செய்து வருபவர் லீயாக் கான். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த மண்ணான இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேசத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் லீயக்கிடம் இரண்டு நபர்கள் வந்து தாங்கள் பெரிய மந்திரவாதி என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் தாங்கள் அலாவுதீன் அற்புத விளக்கு ஒன்று வைத்திருப்பதாகவும், அது மிகுந்த சக்தி வாய்ந்தது எனவும் இதன் மூலம் நாம் கேட்பது எல்லாமே நமக்கு கிடைக்கும், அதனால் பெரிய கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்றும் கூறி உள்ளனர்.

இதனை நம்பிய மருத்துவர் லியக் இந்த விளக்கின் மூலம் நாம் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று எண்ணி 2.62 கோடி பணம் கொடுத்து அந்த தங்க விளக்கினை தவணைமுறையில் வாங்கி இருக்கிறார். இதனையடுத்து சில நாட்களுக்குப் பிறகு இந்த விளக்கினால் தனக்கு ஏதும் நடக்கவில்லை என்பதை அறிந்த மருத்துவர் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை காவல்துறையிடம் கூறி மருத்துவர் புகார் அளித்ததை அடுத்து மோசடி நபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து பல அதிர வைக்கும்  தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |