அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 500 கிராம்
நல்லெண்ணெய் – 500 கிராம்
உப்பு இல்லாத மண்டைவெல்லம் – 400 கிராம்
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து மாவாக இடித்து, சல்லடையில் சலித்து ஏலக்காய் சேர்த்து வைக்கவும். வெல்லத்தை தட்டி தண்ணீர் ஊற்றி, சிறு தீயில் பாகு காய்ச்சவும். பாகு முறுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாகுடன் சேர்த்து பச்சரிசி மாவை பிசைந்து, பின் சிறுது எண்ணெய் விட்டு அதிரச மாவாக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இலையில் எண்ணெய் தடவிக் கொண்டு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து தட்டி எண்ணெயில் போடவும்.
பின்னர் மெதுவாக திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து இரண்டு கரண்டியினால் அழுத்தி எண்ணெயை பிழிந்து எடுத்து வைக்கவும்.
குறிப்பு:
அதிரச மாவு தயார் செய்து வைத்துக் கொண்டு, தேவையான பொழுது தயார் அதிரசம் செய்து கொள்ளலாம்.