Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சீஸ் சூப்… பிரமாதமான ரெசிபி…!!

சீஸ் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

சீஸ் துருவியது                 – சிறியது 50 கிராம்
பல்லாரி                               – இரண்டு நீளமாக வெட்டியது
பால்                                       – ஒரு மேஜைக்கரண்டி
கோஸ்                                   – சேமியா மாதிரி நீளமாக சீவியது
வெண்ணை                       – 2 மேஜைக்கரண்டி
தண்ணீர்                             – 4 கப்
மைதா (அ) வடிகஞ்சி (அ) ஓட்ஸ் தண்ணீர் – 1 1/2 மேஜைக்கரண்டி

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை இளக்கி, அதில் வெங்காயம்,கோஸ் போட்டு வதக்கவும். வதங்கியபின் மைதா மாவை ஒன்று சேர்த்து விழாமல் கிண்டி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பின்பு துருவிய சீஸ் சேர்த்து விடவும். இறுதியில் பரிமாறும் முன் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான சீஸ் சூப் ரெடி.

Categories

Tech |