Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பில்லி சூனியத்தை எடுக்கிறேன் என்று கூறிய பெண் – அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே பில்லி சூனியத்திலிருந்து மிருற்பதாக  கூறி 110 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். நகைகளையும் பணத்தையும் எப்படி இளந்தார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பாலவாக்கத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மித்ரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணி என்ற 23 வயது பெண் தன் வசீகரப் பேச்சால் சிவக்குமாரை கவர்ந்துள்ளார். மேலும் சிவக்குமாருக்கு செய்வினை உள்ளதாகவும் அதனை எடுக்க 365 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் நாராயணி. இதனை நம்பிய  சிவக்குமார் தன்னிடமிருந்த மனைவியின் நகைகள் உறவினர்கள் நகைகள் என்று ஒவ்வொன்றாக பூஜைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் 110 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய நாராயணி தலைமறைவானார்.

இதுகுறித்து சிவகுமார்ரும்  அவரது உறவினர்களும் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை காவல்துறையினர் நாராயணியை கைது செய்தனர். பூஜைக்கு என கூறி அபகரித்த நகைகளை 2 அடகு கடைகளில் வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அடகு கடைகாரர்கள் ரத்தினலால் என்பவரும்  அவரது 19 வயது மகனும் கைது செய்யப்பட்டனர். மாந்திரீக ராணி நாராயணி மோசடிக்கு உடந்தையாக இருந்த ரத்திலால் அவரது மகன் 3 பேரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

மோசடி செய்யப்பட்ட 110 சவரன் நகைகளில் நாராயனிடமிருந்து 5 சவரன் நகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டனர். மீதமுள்ள நூற்றி ஐந்து சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அறிவியலும், தொழில்நுட்பமும் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் மாந்திரீகத்தையும் பில்லி சூனியத்தையும் தம்பி இது போன்ற மோசடிக்காரர்கள் இடம் சிக்க வேண்டாம் என்பதே காவல்துறையினரே எச்சரிக்கையாக உள்ளது.

Categories

Tech |