திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி மின் மோட்டாருக்கு பூட்டு போட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகி கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டர்.
நாற்றம்பள்ளி அடுத்த கொண்டகிண்டம்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட குண்டு கொள்ளை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் மேல்நிலை தொட்டி மினி டேங்க் ஆழ்துளை கிணறு உள்ளது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மின்மோட்டார் பழுதானதால் குடிநீரின்றி மக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்ததை அடுத்து கடந்த வாரம் மீன்மோட்டார் பழுது நீக்கப்பட்டது. அதன்பின் குடிநீர் வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது மின்மோட்டார் அறையை அதே பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய மகளிர்அணி அமைப்பாளர் சரஸ்வதி பூட்டு போட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. இங்கு இவருடைய கணவர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்ததாகவும் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில் இவருடைய மனைவி இதனை பராமரித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி ஆணையாளருக்கு புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கொண்டகிண்டபள்ளி நாற்றம்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முறையாக குடிநீர் வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.