மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
தமிழக அரசியல் கட்டுகளும், உயர்நீதிமன்றமும் ஆளுநரை வலியுறுத்தி வந்தவுடன் தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிலைகள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளை 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.