14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை அவர் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரஷ்யாவில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்துள்ளது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தாயிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மகள் உடல் எடை கூடி இருப்பதாக கூறினார். ஆனால் சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் கண்டிப்பான பெற்றோரிடம் இதனை சொல்ல பயந்து மறைத்ததோடு தானே குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த போது தோட்டத்தில் தந்தை வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போன சிறுமி, பிளாஸ்டிக் பையில் குழந்தையைப் போட்டு ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடி விட்டார். அதன் பிறகு அவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்ததால் குடல் அழற்சி ஏற்பட்டிருக்கும் என அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தார். இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
அப்போது ஆம்புலன்சில் இருந்த துணை மருத்துவரிடம் சிறுமி தான் கர்ப்பமாக இருந்ததும் பிறந்த குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்ததையும் தெரிவித்தார். ஆனால் ஃப்ரீசர் பாக்ஸில் அதிக நேரம் இருந்த குழந்தை உயிரிழந்தது என அந்நாட்டு ஊடகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றார் சிறுமியின் கர்ப்பத்திற்கு 16 வயது சிறுவன் காரணமென்றும் இந்த விடுமுறையில் அவர்கள் காதலை முறித்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.