தமிழகத்தின் நிதி நிலைக்கு டாஸ்மாக் வருவாயே பெரும் பங்கு வகிக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில் டாஸ்மாக்கின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அரசின் கட்டுப்பாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா காலத்திலும் கூட எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் வரை சென்றும் கூட தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து.
டாஸ்மார்க் கடைகள் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டும் மூடப்படுகின்றது. அந்த காலங்களில் மதுப் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி மதுபான கடைகளைத் திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.