நடிகர் ராகவா லாரன்ஸ் படத்திற்கு முதன் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
திரையுலகில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடனம் ,நடிகர். இயக்குனர் ,நடன இயக்குனர்பலத் திறமைகள் கொண்டவர் ஆகும். அவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வசூலை அள்ளிக் குவித்தன. இவர் தற்பொழுது காஞ்சனா படத்தை ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றார். அக்ஷய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதன் இடையே இவர் நடிக்கும் அடுத்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியான நிலையில் அப்படம் பற்றிய முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதனடிப்படையில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக லாரன்ஸ் படத்திற்கு முதன்முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மற்ற இதர விவரங்களை நாளை வெளியிட இருக்கின்றனர்.