Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இளமை பருவத்தில் தோன்றிய யோசனை… தள்ளாடிய வயதிலும்…. தொடரும் தண்ணீர் விநியோகம்…!!!

மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் முதியவர் தன் உடலில் பலம் உள்ள வரையிலும் உழைத்துக் கொண்டே இருப்பேன் என கூறினார்.

தென்காசி மாவட்டதில் உள்ள ஆலங்குளத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதி உள்ளிட்ட அதிக தொழில்நுட்பம் இல்லாத காலத்தில்  இளைஞனாக இருந்த சிவன் ஆறுமுகம் ( தற்போது அவருடைய வயது(67)) என்பவருக்கு மாற்று யோசனை தோன்றியது. தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுத்தால் ஏதோ சிறிதளவு காசு சம்பாதிக்கலாம் என எண்ணினார்.

அதன் விளைவாக அருகிலுள்ள ஊருணியில்  இருந்து தண்ணீரை பேரலில் நிரப்பி மாட்டு வண்டியில் பின்னால்  வைத்து உணவகங்கள், தேனீர் கடைகளுக்கு மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வேலையை தொடங்கியுள்ளார். அவர் மாட்டு வண்டி மற்றும் நலிவடைந்த காளையை கொண்டு இந்த தொழிலை தொடங்கிய போது சுமார் 200 லிட்டர் தண்ணீரின் விலை ரூ. 6 மட்டுமே இருந்தது. அதே போல் இந்த மாட்டு வண்டி தண்ணீருக்கு எப்போதும் மவுசு இருந்து கொண்டே இருந்தது.

இத்தொழில் குறித்து முதியவர் கூறுகையில், ‘நான் கடந்த 35  வருடங்களாக தண்ணீர் வினியோகம் செய்து வருவதன் மூலம் கிடைக்கும் சிறிதளவு வருமானத்தில் தான் எனது 2 பிள்ளைகளையும் வளர்த்தேன். தொடக்கத்தில் ஒரு பேரல் தண்ணீர் ரூ. 6-க்கு விற்பனை செய்தேன். இது கொஞ்சம் கொஞ்சமாக தற்போது ரூ. 60 க்கு உயர்ந்துள்ளது. கேன்களில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விட நான் விற்கும் தொகை மிகவும் குறைவு இந்த தொகை எனக்கு போதும் . வயதானாலும் என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்காமல் உடலில் பலம்  இருக்கும் வரையிலும் உழைப்பேன்’ என்கிறார்.

Categories

Tech |