இளம் வழக்கறிஞர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதம் 3,000 ருபாய் கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சட்டம் படிக்கும் ஆசையுடன் இளைஞர்கள் பலர் சட்டக் கல்லூரியில் இணைந்து படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த பிறகும் அவர்கள் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள குறைந்தது நான்கு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்த நான்கு வருடங்களும் அவர்களது குடும்பத்தினருக்கு போதிய வருமானம் இன்றி அல்லல்படும் சூழல் உருவாகின்றது. இதனை கருத்தில் கொண்ட தமிழக முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி அரசு சார்ந்த கல்லூரிகளில் சட்டம் படித்து முடித்து வெளியில் வரும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் இரண்டு வருடங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.