Categories
தேசிய செய்திகள்

இதை யாரும் நம்பாதீங்க…. பட்ட கஷ்டம் எல்லாம் பாலாயிடும்…. வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதை அறிந்த ICAI தேர்வு தேதியில் மாற்றம் என்று சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலை யாரும் நம்ப வேண்டாம். தவறான தகவல் பரப்பிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சமீப காலங்களாகவே சமூக வலைதளங்களில் அவதூறுகளும், பொய்யான வதந்திகளும் பரப்பப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. இது பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சி ஏ என்ற பட்டயத்தேர்வு மிகவும் கடினமான பாடம்.  மாணவர்கள் கஷ்டப்பட்டு தங்களது கனவுகளை நிறைவேற்ற படித்துக் கொண்டிருக்கும் போது இப்படியான வதந்தி பரப்புவது மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேதனையடைய வைக்கின்றது.

Categories

Tech |