பல முறை முயன்றாலும், நம் உணவு பழக்க வழக்கங்கள் உடல் நலத்தையும் ஆரோகியத்தையும் பாதிக்கும் வகையிலேயே உள்ளது.
பொதுவாக, வெயில் காலத்தில் அனைவரையும் பாதிக்ககூடிய ஒரு பிரச்சனை தலை அரிப்பு. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உச்சந்தலை காய்ந்துவிடுவதாகும். இதனால், அரிப்பு, பொடுகு மற்ற பிற பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படும். உணவு பழக்க வழக்கங்கள் சரிவர இருந்தால், இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பலமுறை முயன்றாலும், நம் உணவு பழக்க வழக்கங்கள் உடல் நலத்தையும் ஆரோகியத்தையும் பாதிக்கும் வகையிலேயே உள்ளது. காய்கறிகளும், பழங்களும், நறுமணப் பொருட்களும், மூலிகைகளும் நிறைந்ததாய் நம் உணவு பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். தலை அரிப்பு பிரச்சனைகளுக்கு, வீட்டிலேயே கிடைக்க கூடிய இயற்கை பொருட்களை கொண்டு பாதிப்பை நீக்கலாம்.
தேயிலை மர எண்ணெய்:
தேயிலை மர எண்ணெய் அழகு ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சையில் முக்கியமான ஒன்று. இந்த எண்ணெயில் காணப்படும் டெபென்ஸ் என்ற கரிம கலவை பூசன எதிர்ப்பு, எதிர்ப்பு அழற்சி, பாக்டீரியா எதிர்ப்பு அகிய சக்திகள் கொண்டது. எனவே, உச்சந்தலைக்கு ஈரப்பதம் அளித்து, அரிப்பு பகுதிகளை நீக்குகிறது.
இரண்டு அல்லது மூன்று துளி தேயிலை எண்ணெய்யுடன், ஒரு தேக்கரண்டி ஆலீவ் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் நன்றாக தேய்க்க வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பலன் கிடைக்கும்.
கற்றாழை:
ஆயூர்வேத குணம் கொண்ட கற்றாழை, தலையில் உள்ள பாதிக்கப்பட்ட உயிரணுக்களை சீராக்க உதவும். அரிப்பு பகுதிகளை நீக்கவும் உதவும். தலை பகுதிகளுக்கு, கற்றாழை ஜெல் தடவி, 15 நிமடங்களுக்கு பிறகு கழுவவும்.
ஆப்பிள் சாறு வினிகர்:
தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, பி.எச் அளவுகளை கட்டுக்குள் வைக்க ஆப்பிள் சாறு வினிகர் உதவிகின்றன. அதுமட்டுமின்றி, பேக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூசன எதிர்ப்பு சக்திகளும் கொண்டதாகும். ஒரு பங்கு ஆப்பிள் வினிகரை நான்கு பங்கு தண்ணீருடன் கலந்து தலையில் தேய்த்து கொள்ளவும். தினசரி உபயோகித்து வந்தால், பலன் கிடைக்கும்.
எலுமிச்சைச் சாறு மற்றும் தேன்:
மேலே சொல்லப்பட்ட பொருட்கள் வீட்டில் இல்லையென்றால், எளிமையான வகையில் எலுமிச்சை சாறு கூட தலை அரிப்பில் இருந்து விடுபடலாம். எலுமிச்சையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி இருப்பதால், பொடுகு பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். எலுமிச்சை சாறு, அல்லது சாறுடன் தேன் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், பலன் கிடைக்கும்.