Categories
லைப் ஸ்டைல்

மக்களே…. உங்களுக்கு எது வசதி…? இதை தெரிஞ்சுக்காம தூங்காதீங்க …!!

இரவில் படுக்கையில் உறங்கச் சென்ற பின் தூக்கம் கண்ணைத் தழுவ தொடங்கியதும் தானாகவே உங்களுக்கு பிடித்த பக்கமாக திரும்பி படுத்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் அல்லது எந்த நிலையில் படுத்து உறங்குகிறார்கள் என்பது உங்கள் தூக்கத்தை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தூங்கும் நிலையைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தேவைகளும், சௌகரியங்களும் அமைகிறது. உங்களுக்கு ஆழமான நிம்மதியான தூக்கம் அமைய வேண்டுமா ? இதோ உங்களுக்கான யோசனைகள்

மல்லாந்து படுத்து உறங்குதல்:

முதுகு படுக்கையை தொட்டபடி மல்லாந்து படுத்து உறங்குவது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லதாகும். மல்லாந்து படுத்து இருக்கும்போது உடல் எடை முதுகுத்தண்டில் சமமாக படுகிறது. இது முதுகு வலியை குறைப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது.

சாதகங்கள்:

இதனால் முகத்தில் சுருக்கம் குறையும்,

முதுகு பிரச்சனை குறையும்,

நெஞ்சு எரிச்சல் குறையும்,

பதக்கங்கள்:

தூக்கக் குறைபாடு,

குறட்டை பிரச்சனை ஏற்படும்.

 பக்கவாட்டில் உறங்கும் நிலை:

பக்கவாட்டில் திரும்பி படுத்து உறங்கும்போது சிறந்த உறங்குவதும் சிறந்த உறங்கும் நிலைதான். குறிப்பாக முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது உதவும். தூக்க குறைபாடு,  குரட்டை பிரச்சனைகளை பக்கவாட்டில் படுத்து உறங்குவது குறைக்கும்.

சாதகங்கள்:

நெஞ்சு எரிச்சல் குறையும் (இடதுபக்கம் படுத்தால்),

மூளை நலத்துக்கு சிறந்தது.

சீரான ரத்த ஓட்டம்,

மலச்சிக்கலை குறைக்கும்,

பாதகங்கள்:

தோள்பட்டை பாதிப்பு

கவிழ்ந்து படுத்தல்:

படுக்கையில் வயிறு படும்படி கவிழ்ந்து படுத்து உறங்குவது ஒட்டுமொத்த உடல் நிலையை அதிகம் பாதிப்பதாக தேசிய தூக்க நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இந்நிலை முதுகுத்தண்டின் மீது அதிக அழுத்தத்தை, நெருக்கத்தையும் தருவதால் முதுகில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பாதகங்கள்:

காலைநேர பதற்றம்,

முதுகுத்தண்டு சுளுக்கு,

முதுகு மற்றும் கழுத்து மூட்டுகளில் அழுத்தம்,

மரத்துப்போதல்,

விறைத்துப் போதல்

குழந்தை நிலை:

குழந்தையைப்போல் கை-கால்களை மடக்கிக்கொண்டு உறங்கும் நிலை பல நன்மை செய்கிறது. அடிமுதுகு வலி, தூக்கக் குறைபாடு, குரட்டை போன்றவற்றை குறைப்பதுடன் கர்ப்பிணிகளுக்கும் இது சிறந்த உறக்க நிலை அமைகிறது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?

உறங்குவதற்கு முன் விளக்குகளை அணையுங்கள்.

உறங்குவதற்கு முன் காபி அருந்துவதை தவிருங்கள்.

எளிமையான, குறைவான இரவு உணவு போதும்.

ஆல்மண்ட் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால், வாழைப்பழம், செர்ரி போன்ற உணவுகளை படுக்கும் முன்பு சாப்பிடலாம்.

Categories

Tech |