ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே எல் ராகுல், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முஹம்மது சிராஜ், நவதீப் சைனி, தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், சுப்மன் கில், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்திப் யாதவ், பும்ரா, முஹம்மது சிராஜ், நவதீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
டெஸ்ட் அணியில் கேப்டன் விராட் கோலி, மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே எல் ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், விருத்திமான் சாஹா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மூன்று தொடர்களிலும் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இதனால் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கே எல் ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தவிர கூடுதல் பந்துவீச்சாளர்களான கம்லேஷ் நகர்கொடி, கார்த்திக் தியாகி, இசான் பொரல் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் இந்திய அணியுடன் செல்கின்றனர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.