தமிழக அரசு ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த ஊராட்சி அளவில் ஐந்து குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக்குழு அமைக்கப்பட உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைத்து உறுப்பினர்களை நியமிக்க ஆட்சியாளருக்கு தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 6 – 7 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அதனை கணக்கில் கொண்டே தமிழக அரசு இவ்வாறான திட்டங்களை, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் தான் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.