டெல்லியில் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
டெல்லியின் காற்று தர குறியீடு 349 ஆக பதிவாகியிருந்தது. இது மிகவும் மோசமான நிலையாகும். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து மாசு அதிகரித்து வருகிறது. ஆனந்த விகார், துவார்க, ரோகினி, முன்கா போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.
அடுத்த ஓரிரு நாட்களுக்கு காற்றின் தரம் மோசமான நிலையிலேயே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளால் அங்குள்ள மக்கள் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர்.