நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை கன்னியாகுமரி இடையே 4250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்த ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்த போது எப்படி இருந்ததோ அதே நிலைதான் தற்போது உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனாா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை விரைவு ரயில்கள் ஆக மாற்றியதால் கிராமப்புற ரயில் நிறுத்தங்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு பயணிகள் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.