Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்…..போட்டியிடும் நபர்கள் யார்….?

தமிழ் திரைப்பட துறையின் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.  இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம்  நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர், பி .எல் தேனப்பன், தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி என்கிற முரளி ராம. நாராயணன் ஆகிய 3 பேர்  போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர்கள்  பதவிக்கு , முருகன், பி.டி.செல்வகுமார்,  சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் போன்ற 4 பேர் போட்டியிடுகின்றனர். மேலும்  பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ், ஜெயின்,  கே.ராஜன் ஆகியோரும் மற்றும் செயலாளர்கள் பதவிக்கு  ராதாகிருஷ்ணன், ராஜேஷ், சுபாஷ் சந்திரபோஸ், ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன் போன்றோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனு தாக்கல், கடந்த  15-ந்  தேதி தொடங்கியுள்ளது.  டி.ராஜேந்தர், முரளி,  பி.எல்.தேனப்பன் ஆகியோர்  நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகின்றன  29-ந் தேதி கடைசி நாள் ஆகும்.  ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி அன்றே மாலை முடிவுகள் தெரிவிக்கவிடும்.

Categories

Tech |