Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஷாக்…. விடா பிடியாக இருந்த மத்திய அரசு… கைவிரித்த உச்சநீதிமன்றம் …!!

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தற்பொழுது  உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. வெறும் 30 நொடிகளில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை என்பது தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு இடஒதுக்கிட்டை அமல்படுத்த முடியாது, அடுத்த ஆண்டிலிருந்து நீங்கள் கடைபிடியுங்கள் என்ற அறிவிப்பை எதிர்த்து மனு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு அதை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கனவு சிதைந்து போய்விடும் என்பதை அவர் குறிப்பிட்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது ? மத்திய அரசு இந்த ஆண்டு நிச்சயம் முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தார்கள். இதனால் இந்த ஆண்டு ஓபிசி மாணவர்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |