Categories
உலக செய்திகள்

1 இல்ல, 2 இல்ல…. மொத்தம் 9 பேர்…. கனடாவை கலக்கிய இந்தியர்கள் …!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வட அமெரிக்காவிலுள்ள கனடா, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

87 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா சட்டப்பேரவையில் புதிய ஜனநாயகக் கட்சி 55 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. லிபரல் கட்சி 29 இடங்களிலும் க்ரீன் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.

இத்தேர்தலில், புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 55 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சர்ரே நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றிபெற்றுள்ளனர்.50 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசிப்பவர்களில் சுமார் 10 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |