புலம் பெயர்ந்த இந்தியர்கள் கனடாவில் ஒன்று திரண்டு பாகிஸ்தானை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அக்டோபர் 22 ஆம் தேதி 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது படையெடுத்தது. இதில் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதனை தொடர்ந்து அப்போதைய காஷ்மீர் மன்னரான ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் கைகொர்த்தார். இதனால் காஷ்மீரை மையமாக வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே முதல் போர் உருவானது. 1948ஆம் வருடம் வரை நீடித்த இந்த போர் 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இதில் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதோடு தற்போது வரை அந்தப் பகுதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பாகிஸ்தான் படையெடுத்த நாளான அக்டோபர் 22 காஷ்மீரில் கருப்பு தினமாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பாகிஸ்தான் படையெடுத்து 73 ஆண்டுகள் ஆன நிலையில் அந்நாள் கருப்பு நாளாக பாவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதனிடையே இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவிற்கு சென்ற இந்தியர்கள் ஒன்றுதிரண்டு காஷ்மீரின் கருப்பு தினத்தை அனுசரித்தும் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் ஏராளமானோர் பங்கேற்று பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.