Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பல்கலை.., கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு ….!!

கொரோனா கால பொது முடக்கத்தால் தேசம் முழுவதும் முடக்கப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து துறைகளும் முழுமையாக மூடப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றது.

கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பொதுமுடக்கம் காலங்களில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் உட்பட அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் தற்போது எப்போது வேண்டுமானாலும் கல்வி நிலையங்கள் திறக்கலாம், அதற்கான உத்தரவு வரலாம் எனபதால் கல்விநிலையங்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றன. பல்வேறு தொடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி இணைச்செயலாளர் ஜி.எஸ் சவுகான் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

Categories

Tech |