பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார்.
துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 50, ஏபி டி வில்லியர்ஸ் 39 ரன் எடுக்க அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்குவாட் 51 பந்துகளில் 65 ரன் விளாசி அசத்தினார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் ருத்ராஜ் கெய்க்குவாட். சென்னை அணிக்கு 2 விக்கெட் மட்டுமே இழக்க ருத்ராஜ் கெய்க்குவாட் தோனியுடன் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
கடைசியாக விளையாடிய போட்டியில் பேசிய சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் ருத்ராஜ் கெய்க்குவாட் தோனி எதிர்முனையில் வைத்துக்கொண்டு 4,6 என வின்னிங் ஷார்ட் அடித்தது எங்களைப் பாருங்கள்… எங்களிடம் ஸ்பார்க் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது இதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.