Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

நீளமான கூந்தலுக்கான எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்…!!

உங்கள் டயட் உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் உள்ளதா, அப்படியென்றால் நீங்கள் அதிர்ஷடசாலி தான். பெரும்பாலானோருக்கு இது அமைவதில்லை. அதற்கு மாறாக இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கு ஆளாகுகிறார்கள். முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசுக்கள், தண்ணீர் என பல காரணங்களினால் கூந்தல் பாதிப்பு ஏற்படுகிறது. இது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். சிலர் நினைக்கலாம், முடியை வெட்டிவிட்டால் சற்று நீளமாக வளரும் என்று. ஆனால், அது அனைவருக்கும் ஏற்படுவதில்லை.

96pou8no

நீளமான கூந்தலுக்கான சில டிப்ஸ்:

1. முடி மற்றும் உச்சந்தலையில் தூய்மை
உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அவற்றை ஒழுங்காக சுத்தம் செய்து வந்தால், கூந்தல் நீளமாக வளருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும், டிரையர் பயன்படுத்தாமல் இருக்கலாம். கண்டகண்ட ஷாம்புவிற்குப் பதிலாக ஆர்கானிக் ஷாம்பு வகைகளைப் பயன்படுத்தலாம்.

2. தலையணைகள்

ஆம். தலை முடிக்கும் தலையணைக்கும் சம்பந்தம் உள்ளது. இப்போது பலரும் ஃபோம் தலையணையைப் பயன்படுத்துகின்றனர். இது ஆபத்தானது. உடல்நலனுக்கும் கேடுவிளைவிக்கக்கூடியது. எனவே, பருத்தியிலான தலையணைகளைப் பயன்படுத்தவும்.

ibclc098

3. டவல் டிரையிங்கை தவிர்க்கவும்

பலர் டவலை சுருட்டி முடி காய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இதுவும் உங்கள் கூந்தலைப் பாதிக்கும். நீளமான கூந்தல் இருந்தால், இவ்வாறு டவல் பயன்படுத்தி தலை காய வைப்பதைத் தவிர்க்கவும்.

4. ஷாம்புவை முற்றிலுமாகத் தவிர்க்கவும்

குளிக்கும் போது தலைமுடிக்கு ஷாம்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஷாம்பு பயன்படுத்தினால் பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கும். ஆனால், அடிக்கடி ஷாம்பு போட்டுக் குளித்தால் முடி உதிர்வு ஏற்படும் அபாயமும் உள்ளது.

4jdvmh4g

5. எந்த சீப்பு பயன்படுத்துகிறீர்கள்:

பிளாஸ்டிக் சீப்பு, பிரஷ்களை தவிர்க்கவும். நீண்ட கூந்தல் இருந்தால், மரத்தினால் ஆன சீப்பையோ பிரஷையோ பயன்படுத்தவும். இது உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

6. டயட்டில் கவனம் தேவை:

உங்கள் டயட் உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். விட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன்கள் இருக்க வேண்டும்,. வெண்ணெய், நெல்லிக்காய் (அம்லா), கீரை மற்றும் தயிர் யோக்ரட் வகைகளை உணவில் சேர்க்கவும்.

Categories

Tech |