மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சராசரி பலன்களே கிடைக்கும். நீங்கள் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
உங்களின் சக பணியாளர்களுடன் உறவுமுறையில் சில பிரச்சினைகள் காணப்படும். இதனால் நீங்கள் அனுசரித்து செயல்படுவது நல்லது. சில அமைதியற்ற தருணங்கள் காணப்படும். இன்று நிதிவளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. பணத்தை கையாளும் பொழுது கவனமாக இருங்கள். கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கெட்டசகவாசங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.