இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது.
இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது.
இந்த கொடூர தாக்குதலை பல்வேறு நாட்டின் தலைவர்கள் கண்டித்துள்ளார். மேலும் இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை நாட்டின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதில் அந்நாட்டில் உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.