Categories
தேசிய செய்திகள்

அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி – கபில் தேவ்…!!

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 61 வயதாகும் கபில்தேவ் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அனைவரின் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி என்றும் நலமுடன் குணமடைந்து வருவதாகவும் கபில் தேவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |