வெகுநாட்களாக வடகொரிய அதிபரின் மனைவி யார் கண்ணிலும் தென்படாததால் அவர் கிம்மால் கொல்லப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதிபர் கிம் ஜாங் உன் மனைவியும் வட கொரியாவின் முதல் பெண்மணியும் ஆன ரி சோல் ஜூ கடைசியாக ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அதன் பிறகு யார் கண்ணுக்கும் அவர் தென்படாததால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாரா அல்லது தனது கணவனால் கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடைசியாக அதிபரின் மனைவி ரி சோல் ஜூ பாங்கியாங்கில் அமைந்துள்ள தியேட்டரில் நடந்த நிகழ்ச்சிக்கு கிம்முடன் ஜோடியாக சென்றார். கிம் மற்றும் அவரது மனைவி கிம் அத்தை அருகே நிகழ்ச்சியின்போது அமர்ந்திருந்தனர். ஆனால் அதற்கு பிறகு பல நிகழ்ச்சிகள் நடந்தும் எதிலும் ரி சோல் ஜூ பங்கேற்கவில்லை.
இதனால் மனிதாபிமானம் இல்லாமல் சொந்த மனைவியை அதிபர் கிம் கொலை செய்து விட்டாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. 2013 ஆம் வருடம் தனது அத்தையின் கணவர் ஜங் சாங் தேக் என்பவரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.