Categories
உலக செய்திகள்

பஞ்சத்தை உண்டாக்கிய ஊரடங்கு…. ”பாம்பு, எலிதான் முக்கிய உணவு”…. கொரோனவால் பரிதாபமான நாடு …!!

இரண்டாவது ஊரடங்கால் நகர்ப்புறங்களில் இருந்தவர்கள் கூட பாம்பு எலி போன்ற உணவுகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றினால் வேலை இழப்பு, வருவாய் இல்லாமை போன்ற பிரச்சினைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் மியான்மர் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்கள் வறுமையினால் எலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வேட்டையாடி வருகின்றனர். மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்த போது மக்கள் தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து உணவுக்கான தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழியை கண்டறிந்தனர்.

தற்போது இரண்டாவது ஊரடங்கு செப்டம்பர் முதல் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலானோர் தாங்கள் உடுத்தும் உடையிலிருந்து வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் வரை விற்று உணவு ஏற்பாடு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அடகு வைப்பதற்கும் விற்பதற்கும் ஒன்றுமில்லாத இல்லாத ஏழை மக்கள் எலி பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை விற்க தொடங்கியுள்ளனர். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் பொதுவாக ஊர்வன, பூச்சிகள் மற்றும் எலிகளை உணவாக சாப்பிட்டனர்.

ஆனால் தற்போதைய காலத்தில் வருவாய் இல்லாததால் நகர்ப்புற மக்களும் இதனை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயிரம் பேர் உயிரிழந்தது என மோசமான பாதிப்புக்கு இலக்கான பகுதி ஆசியாவில் மியான்மர் தான். அதோடு புகழ்பெற்ற ரங்கூன் நகரத்தில் ஊரடங்கால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்து அத்தியாவசிய உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகளால் 40 சதவீத மக்களுக்கு மட்டும்தான் உதவ முடிந்தது. தொழிற்கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் ஏராளமான மக்கள் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மியான்மர் அரசு அந்நாட்டு மக்களுக்கு கொடுக்கும் 15 டாலர் உதவித்தொகையும் ஒரு வேளை உணவும் அவர்களுக்கு போதும் என்று தோன்றவில்லை.

Categories

Tech |