விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் போலீசார் நேரில் விசாரிப்பார்கள் என தெரிகின்றது.
இந்து மத சாஸ்திரத்தில் உள்ளதை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்கள் குறித்து மிகத் தரக்குறைவாக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பாஜக சார்பில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு இது தொடர்பாக திருமாவளவனிடம் நேரில் விசாரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்த புகார் நேற்று தான் ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்டது, உடனே சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஒரே நாளில் புகார் கொடுத்து, திருமாவளவன் எம்.பி மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.